Skip to main content

Grade 10 (operating system)




பணி செயல் முறைமை

முறைமையானது மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது அவையாவன
  • வன்பொருள் Hardware 
  • மென்பொருள் Software 
  • நிலை பொருள் Liveware

வன்பொருள் Hardware -  வன்பொருளானது தொட்டு உணரக்கூடிய அனைத்து சாதனங்களையும் குறித்து நிற்கின்றது
 Keyboard,mouse, monitor,ect....

நிலை பொருள் Liveware -  கணணியை பிரயோகம் செய்யும் மனிதரை குறித்து நிற்கின்றது

👉Booting என்பது கணினி ஆரம்ப தொழிற்பாட்டுக்கான செயற்பாடாகும். அதாவது பணி செயல் முறைமை கணணியின் பிரதான நினைவுக்கு செல்லும் வரை ஆன செயல்பாடு ஆகும்


மென்பொருள் Software - பல்வேறுபட்ட தேவைகளினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட செய்நிரல் ஆக்கம் மென்பொருள் எனப்படும்


முறைமை மென்பொருள்
  • பணி செயல் முறைமை மென்பொருள் 
  • பிரயோக மென்பொருள் 
  • பயன்பாட்டு மென்பொருள்

01.பணி செயல் முறைமை
  • பணி செயல் முறைமையானது வன் பொருட்களையும் மென்பொருட்களையும் முகாமை செய்ய பயன்படும்
  • இது கணினிக்கும் பயனருக்கும் இடையிலான இடைத்தொடர்பை மேற்கொள்ளும்

Windows, Ubuntu,Mac os, Linux, android 
Mac os for apple campany
Free and open source - Ubuntu, Linux, Fedora


02. பயன்பாட்டு மென்பொருள்

கணணியை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்ற மென்பொருளானது பயன்பாட்டு மென்பொருள் எனப்படும்
Antivirus, disk format,disk defragmentation



03. மொழிபெயர்ப்புகள்
  • மனிதனுக்கு இலகுவாக விளங்கக் கூடிய வகையில் எழுதப்பட்ட செயல்களை கணினிக்கு விளங்கக்கூடிய வகையில் மாற்றி அமைக்கும் மென்பொருளே மொழிபெயர்ப்புகள் எனப்படும்
        Assembler,Interpreter,Compiler

Assembler - Assembly language to machine language
Interpreter - High-level language to machine language in line by line
Compiler - High-level language to machine language before program run
                  (High-level language - java, python,c++,c) 

பிரயோக மென்பொருள்

பயனருக்கு ஏற்ற தேவைகளை நிறைவேற்றுவதற்காக தேவைக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட செய்நிரலாக்கம்  பிரயோக மென்பொருள் எனப்படும்
Ms word, PowerPoint, browser,games, Photoshop 
 

பணி செயல் முறைமையின் வகைகள்
  1. தனிப் பயன்பாடு single user
  2. பல் பயன்பாடு multi user
  3. பல் கொள் பணி multi tasking user
  4. நிகல் நேரம் real time user

பணி செயல் முறைமை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள்
  1. Process Management
  2. Memory Management
  3. File Management
  4. Device Management
  5. Security Management
  6. Network Management 

பணி செயல் முறைமையானது இடைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகைகளாக பிரிக்கப்படும்
  1. கட்டளை கோட்டு இடைமுகம் (CLI)
  2. வரைவியல் பயனர் இடைமுகம் (GUI)

வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) பிரதான கூறுகள்
WIMP என அழைக்கப்படும்
Windows
Icon
Menu
Pointing 


Disk Partitioning (வட்டு பிரிவிடல்)

கணினியில் பவுதிகமாக காணப்படும் வன்வட்டை பகுதி பகுதியாக பிரிக்க பயன்படுத்தப்படுவது


Disk Formatting (வட்டு வடிவமைத்தல்)

வட்டு பிரிவிடலை மேற்கொண்ட பிறகு வட்டு வடிவமைத்தல் பணி மேற்கொள்ளப்படும் இதன் பிறகு தரவு சேமிக்கப்படும்


Disk Defragmentation (வட்டு ஒருங்கமைத்தல்)

பிரதான நினைவகத்தில் காணப்படும் பணிகள் சிதறண்டாக காணப்படும்.
அப்பணிகளை ஒழுங்கு வரிசையாக வரிசையாக்க மேற்கொள்ளப்படும் பணி இதுவாகும் 


Comments

Popular posts from this blog

Grade 11 (multimedia session -04)

இலக்கமுறை வரைவியல் இலக்க முறை வரைவியல் என்பது கணினி வரைவியல் மென்பொருளை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்ற படம் அல்லது உருவமானது இலக்க முறை வரைபுகள் என அழைக்கப்படும் விரைவின் வகைகள் இரண்டு வகைப்படும் 1. பரவல் வரைவு (Raster image) 2. நெறிய வரைவு (vecter image) பல்வேறு வர்ணங்களைக் கொண்ட படம் மூலம் கூட்டத்தால் உருவாக்கப்படும் வரைவு பரவல் வரைபு கேத்திர கணித உருக்களினால் உருவாக்கப்படும் விரைவு நெறிய வரைவு பரவல் வரைவின் தரம் அதனை நெருக்கமாக்கும்போது குறைக்கப்படும் ஆனால் நெறிய விரைவில் தரம் மாற்றமடையாது GIMP software for open source OS இதை நான்கு பிரதான கூறுகளை கொண்டுள்ளது படமூலம் pixel  பிரிதிறன்  resolution  பருமன் size  வர்ணம் colour  01. படம் மூலம்(pixel) படம் மூலம் என்பது யாதேனும் ஒரு வர்ணத்தை கொண்டதாகவும் வெற்று கண்ணால் பார்க்க கடினமாகவும் உள்ள மிகச் சிறிய புள்ளியானது படம் மூலம்(pixel) எனப்படும்  இவ் விலக்கமுறை வரைபு ஆனது பல்லாயிரக்கணக்கான படம்மூலங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இது bitmap எனவும் அழைக்கப்படும் மேலும் குறைந்த அளவு படம் மூலங்களைக் கொண்ட படமானது த...

System Development Life Circle (SDLC) Tamil Medium